பினாங்கு இந்து அறவாரியம்; தலைவராக இருக்கத் தயார்- ஜக்தீப் சிங் அறிவிப்பு!

- Muthu Kumar
- 31 Mar, 2025
ஜோர்ஜ் டவுன், மார்ச் 31-
மார்ச் 16ஆம் தேதி நடைபெற்ற தனது கட்சித் தேர்தலுக்குப் பிறகு ஜசெகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைமைத்துவத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓர் அரசு நிறுவனமான அந்த அறவாரியத்திற்குத் தற்போது ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என். ராயர் தலைவராகவும் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன் துணைத் தலைவராகவும் உள்ளனர்.
தலைவர்,துணைத் தலைவர் உட்பட அதன் பொறுப்பாளர்கள் அனைவரின் பதவிக் காலமும் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்து அறவாரியத்தின் தலைவர் பதவியை ஏற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக பினாங்கின் இரண்டாம் நிலை துணை முதல்வர் ஜக்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
அந்த அறவாரியத்தில் மாற்றம் செய்ய வலியுறுத்தி இந்திய அமைப்புகளிடமிருந்தும் மக்களிடமிருந்தும் கோரிக்கைகளும் மகஜர்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பினாங்கு இந்து அறவாரியத்திற்குத் தலைமையேற்க நான் தயாராக இருக்கிறேன் என்று நேற்று நேற்று தெரிவித்தார்.அந்த அறவாரியத்திற்கு நான் தலைமையேற்றால் அந்த வாரியத்திற்குகளும் உதவிபுரிய அனுபவமிக்க வல்லுநர்களும் தொழில்நிபுணர்களும் ஆர்வத்துடன் உள்ளனர் என்றார்.
ஆர்எஸ்என் ராயரும் டாக்டர் லிங்கேஸ்வரனும் ஜசெகவின் ஆலோசகர் லிம் குவான் எங்கின் நீண்டகால விசுவாசிகள் ஆவர்.பினாங்கு மாநில அரசை நிர்வகிக்கும் விவகாரம் தொடர்பில் லிம்முக்கும் அம்மாநில அரசியல் தலைவர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக விரிசல் நிலவி வருகிறது.
பிரச்சினை எதுவாக இருந்தாலும், பினாங்கு முதல்வர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் ஜக்தீப் சிங் கூறினார். அறவாரியத்தின் உறுப்பினர்களை முதல்வரின் ஆலோசனையின்படி பினாங்கு ஆளுநர்தான் நியமிப்பார்.அறக்கட்டளைக் ஐந்து அறக்கட்டளைகள், பல்வேறு சொத்துகள், பதின்மூன்று ஆலயங்கள் போன்றவற்றை பினாங்கு இந்து அறவாரியம் நிர்வகித்து வருகிறது. வருடாந்திர தைப்பூச விழாவையும் அது நடத்தி வருகிறது.
இதனிடையே, வாரியத்தின் தலைமைத்துவத்தில் மாற்றம் எதுவும் நடப்பது குறித்து தமது கவனத்திற்கு இதுவரை வரவில்லை என்று ஆர்எஸ்என் ராயர் உடனடியாகக் கருத்துரைத்துள்ளார்.ஆயினும், இதனை மாநிலத் மாநிலத் தலைமைத்துவத்திடமே விட்டுவிடுகிறேன்.ஜூ லை மாதத்திற்குப் பிறகும் தலைவர் பதவியில் தொடர்வேனா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும் என்றார் அவர்.
Selepas pemilihan parti JSC pada 16 Mac, perubahan kepimpinan dijangka berlaku dalam Lembaga Hindu Pulau Pinang. Jawatan pengerusi kini dipegang oleh RSN Rayer, namun Timbalan Ketua Menteri II, Jagdeep Singh, menyatakan kesediaan untuk mengambil alih. Keputusan akhir bergantung kepada Ketua Menteri Pulau Pinang dan Gabenor negeri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *