பெட்ரோல் நிலையக் கழிப்பறைக் கோப்பையில் பிறந்த குழந்தையை போட்டுச் சென்றவர்கள் கைது!

- Shan Siva
- 26 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 26: கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்போங் சுங்கை ஹாஜி டோரானியில்
உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தின் ஒரு கழிப்பறை கோப்பையில் குழந்தையின் உடல்
கண்டெடுக்கப்பட்ட வழக்கில், ஒரு தாயையும் அவரது மகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
முதல் சந்தேக நபரான 41 வயது பெண் நேற்று மாலை 6.15 மணியளவில் கிள்ளான் மேருவில் உள்ள ஒரு தொழிற்சாலை வளாகத்தில் கைது
செய்யப்பட்டதாக சபாக் பெர்னாம் காவல்துறைத் தலைவர் யூசோப் அகமது தெரிவித்தார்.
பின்னர், அதே நாள் இரவு 8.30 மணியளவில் மேருவில் இரண்டாவது சந்தேக நபரான 18 வயது துரித உணவு உணவக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
முதல் சந்தேக நபருக்கு தனது மகள் கர்ப்பமாக இருப்பது தெரியாது
என்பது மேலும் விசாரணையில் தெரியவந்தது என்று யூசோப் ஓர் அறிக்கையில்
தெரிவித்தார்.
இரு சந்தேக நபர்களிடமிருந்தும் ஒரு பெரோடுவா பெஸ்ஸா கார், ஆடைகள், மொபைல் போன்கள் மற்றும் பிற பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Polis telah menahan seorang ibu dan anak perempuannya berhubung penemuan mayat bayi dalam mangkuk tandas di sebuah stesen minyak di Kampung Sungai Haji Dorani. Seorang wanita berusia 41 tahun ditahan di Meru, Klang, diikuti oleh anak perempuannya yang berusia 18 tahun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *