2024ஆம் ஆண்டு கெர்கிஸ் கால்பந்து போட்டியில் டேசா செம்பாக்கா இடைநிலைப்பள்ளி கோப்பை வென்றது!
- Muthu Kumar
- 02 Oct, 2024
சிரம்பான், அக்,2-
சிரம்பான் கெர்கிஸ் மன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு கெர்கிஸ் கால்பந்து சுழல் கிண்ணப் போட்டியில் 1-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி கிண்ணத்தை நீலாய், டேசா செம்பாக்கா இடைநிலைப்பள்ளி அணி தட்டிச் சென்றது.
நேற்று செயிண்ட் போல் இடைநிலைப்பள்ளித் திடலில் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற அப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் செயிண்ட் போல் இடைநிலைப்பள்ளி அணியை எதிர்த்து
களமிறங்கியது டேசா செம்பாக்கா அணி. கடும் மழையிலும் அந்த இறுதி ஆட்டத்தில் இரு அணியினரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
முதல் நிலைக்கு தேர்வு பெறும் என மாணவ கால்பந்து ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட செயிண்ட் போல் அணி, சற்றும் எதிர்பார்க்காத நிலையில் தோல்வியை தழுவி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது.
இப்போட்டியில் மூன்றாம் இடத்தை சிரம்பான் 2 இடைநிலைப்பள்ளி மற்றும் நான்காம், ஐந்தாம், ஆறாம் இடங்களுக்கு முறையாக சிரம்பான் ஜெயா 2, துவாங்கு அம்புவான் டூரா மற்றும் தாமான் செமாராக் ஆகிய இடைநிலைப்பள்ளி அணிகள் தேர்வாயின.
இப்போட்டியில் அதிக கோல் அடித்த ஆட்டக்காரராக சிரம்பான் 2 அணி ஆட்டக்காரர் அர்விந் தேர்வானார்.இதனிடையே சிறந்த கோல் கீப்பராக டேசா செம்பாக்கா அணி ஆட்டக்காரர் டனீஸ் ரவி, சிறந்த ஆட்டக்காரராக டேசா செம்பாக்கா அணியை சேர்ந்த கிரண் ரெட்டி பிரகாஷ் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் இப்போட்டி நடைபெற்று வருவதாகக் கூறிய கெர்கிஸ் மன்றத் தலைவரும், முன்னாள் தேசிய இடைநிலைப்பள்ளி முதல்வருமான வேலன் ராமன், இப்போட்டியின் சிறந்த இந்திய இளம் கால்பந்து ஆட்டக்காரர்களை உருவாக இப்போட்டி முக்கிய பங்களிக்கிறது என குறிப்பிட்டார்.
இதைப் போன்ற போட்டிகள் மாணவர்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதோடு, தவறான வழிக்குச் செல்வதிலிருந்து அவர்களை தடுத்து, சமுதாயத்திற்கும், நாட்டுக்கும் நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாக அமைகிறது எனவும் வேலன் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *