போதைப் பொருள் கடத்தல் ஒழிப்பில் ஓயமாட்டோம்- ஐஜிபி எச்சரிக்கை!

- Muthu Kumar
- 24 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 24-
போதைப் பொருள் மீதான தங்களில் துடைத் தொழிப்பு நடவடிக்கைகளிலிருந்து போலீசார் சற்றும் பின்வாங்க மாட்டார்கள் என்று, போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு, தேசிய போலீஸ் படைத் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.
நாட்டில் மிகப் பெரிய அளவில் மெத்தாம்பேத்தாமின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, டான் ஸ்ரீ ரஸாருடின் உசேன் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்டிருந்த மிகப் பெரிய அளவிலான மெத்தாம்பேத்தாமின் போதைப் பொருள் கடத்தலை, ஆஸ்திரேலிய மத்திய போலீஸ் படையின் உதவியுடன் தாங்கள் வெற்றிகரமாக முறியடித்திருப்பதாக, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.
“இதில் சம்பந்தப்பட்டுள்ள கடத்தல் கும்பல்களை முடக்குவதில் தொடர்ந்து வேகத்தை முடுக்கிவிடவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்று டாஸ்க்ஃபோர்ஸ் டைகர் என்று அழைக்கப்படும் ஏஎஃப்பி உடனான ஒத்துழைப்புகுறித்து ரசாருடின் தெரிவித்தார்.
“எங்களின் இரு நாடுகளுக்கு இடையிலான போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் துடைத்தொழிப்பதும் கடத்தல் கும்பல்களை குறிவைப்பதும் இந்த பங்காளித்துவத்தின் இலக்காகும்.“தங்களில் இத்தகைய நடவடிக்கைகளினால் இறுதியில் தோல்வியடையவிருப்பது தாங்கள்தான் என்பதை இக்கும்பல்கள் விரைவில் உணர வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இப்பங்காளித்துவமானது, கடந்த ஆண்டு நவம்பரில் கையெழுத்தானது.
இப்பங்காளித்துவத்தின் பலனாக, 160 கோடி வெள்ளி மதிப்புள்ள மெத்தாம்பேத்தாமின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று ரஸாருடின் கூறினார்.
Ketua Polis Negara, Tan Sri Razarudin Husain memberi amaran keras kepada sindiket dadah bahawa polis tidak akan berkompromi. Kerjasama Malaysia-Australia berjaya merampas dadah methamphetamine bernilai RM1.6 bilion. Taskforce Tiger akan terus membanteras penyeludupan dadah rentas negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *