எங்களுக்குப் பயமில்லை! சட்டத்தை மதிக்கிறோம்! – FAHMI FADZIL விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

அன்வாருக்கு ஆதரவளித்த 6 BERSATU நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தொடரலாம் என சபாநாயகர் Tan Sri Johari Abdul தெரிவித்திருக்கும் நிலையில் இது குறித்து Bersatu கட்சியின் தலைவர் Tan Sri Muhyiddin Yassin நடப்பு அரசாங்கம் குறிப்பிட்ட 6 நாடாளுமன்றத் தொகுதிகளைக் காலி செய்தால் இடைத்தேர்தலில் மீண்டும் பெர்சத்து கட்சி அதன் வெற்றியை உறுதிச் செய்யும் என தெரிந்து, அவர்கள் காலி செய்யாமல் அன்வாருக்கு ஆதரவளித்த Datuk Syed Abu Hussin Hafiz Syed Abdul Fasal (Bukit Gantang), Datuk Dr Suhaili Abdul Rahman (Labuan), Zahari Kechik (Jeli), Mohd Azizi Abu Naim (Gua Musang), Datuk Iskandar Dzulkarnain Abdul Khalid (Kuala Kangsar) Datuk Dr Zulkafperi Hanapi (Tanjong Karang) 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியையும் தற்காக்க நினைப்பதாகத் தெரிவித்தார்,

இதற்கு பதில் அளித்த  தொடர்புத் துறை அமைச்சர் Fahmi Fadzil எதிர்க்கட்சியினர் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் அரசாங்கத்தை வழிநடத்தும் நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், சபாநாயகரின் முடிவுக்கு எதிராகவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகக் கருத்திட கூடாது என்பது சராசரி குடிமக்கள் பின்பற்ற வேண்டிய விதி. மீண்டும் ஓர் இடைத்தேர்தலை எதிர்நோக்க எங்களுக்குப் பயமில்லை. ஆனால் அது அவசியமற்றது, நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம் என Fahmi Fadzil எதிர்கட்சியினருக்கு விளக்கமளித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *