மியான்மார் நிலநடுக்கத்தால் பினாங்கிற்குப் பாதிப்பில்லை! Chow Kon Yeow விளக்கம்!

top-news

மார்ச் 29,

நேற்று மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பினாங்கிற்கும் நிலநடுக்க அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகளைப் பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow மறுத்தார். பினாங்கு பாலம் உட்பட கட்டிடங்களும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏதும் பினாங்கில் உணரப்படவில்லை என்றும் Chow Kon Yeow விளக்கமளித்தார்.  மக்களைப் பதட்டமடைய வைக்கும் இது மாதிரியான ஆதாரமற்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

மியன்மாரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது தாமும் பினாங்கு கொம்தாரில் இருந்ததாகவும் அப்போது நிலநடுக்கம் தொடர்பாக எந்தவொரு நடுக்கமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சுமார் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் மியன்மார் பெரும் சேதத்தைக் கொண்டிருந்தாலும் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்பதையும் உறுதிடுத்துயது.

Ketua Menteri Pulau Pinang, Chow Kon Yeow, menafikan dakwaan bahawa gempa bumi di Myanmar memberi kesan kepada negeri itu. Tiada gegaran dirasai, dan bangunan termasuk Jambatan Pulau Pinang selamat. MET Malaysia juga mengesahkan tiada ancaman tsunami.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *