ஆறு சுற்று விசாரணைக்குப் பிறகு இஸ்மாயில் சப்ரிக்கு எம்ஏசிசி இன்று “விடுமுறை” வழங்கியது!

- Muthu Kumar
- 21 Mar, 2025
புத்ராஜெயா, மார்ச் 21-
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் மூத்த அதிகாரிகள் நால்வர் மீதான தனது விசாரணையை, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) அடுத்த வாரம் மீண்டும் தொடர விருப்பதால், இதோடு அடுத்த வாரத்தில்தான் இஸ்மாயில் சப்ரி மீண்டும் விசாரிக்கப்படுவார்.
இன்று வெள்ளிக்கிழமை தமக்கு “விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக, எம்ஏசிசி தலைமையகத்திற்கு வெளியில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் இஸ்மாயில் சப்ரி நேற்று தெரிவித்தார்.
நேற்று காலையில் தொடங்கப்பட்ட விசாரணை பிற்பகலில் முடிவுற்ற பிறகு, பெரா
நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரி பிற்பகல் 2.50 மணியளவில் எம்ஏசிசி
தலைமையகத்திலிருந்து விசாரணையில் இஸ்மாயில் சப்ரி ஒரு சாட்சியல்ல மாறாக, ஒரு சந்தேகப்பேர்வழி என்று இதற்கு எம்ஏசிசி கூறியிருந்தது.
விசாரணை இன்று நடத்தப்படாது என்பதால், விசாரணை நடத்துவதற்காக, அடுத்த வாரத்தில் ஏழாவது தடவையாக இஸ்மாயில் சப்ரி அழைக்கப்படுவார் என்று எம்ஏசிசி வட்டாரம் ஒன்று நேற்று தெரிவித்தது.கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இஸ்மாயில் சப்ரி தமது சொத்து விவரங்களை அறிவித்த பின்னர் 19ஆம் தேதி முதல் முறையாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர், இம்மாதம் 13,14, 17 மற்றும் நேற்று விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். இந்த ஆறு நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் ஆறு மணி நேரம் அவர் விசாரிக்கப்பட்டார்.
**Ringkasan Berita (40 Perkataan)**
Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) akan sambung siasatan terhadap empat bekas pegawai kanan Ismail Sabri minggu depan. Bekas Perdana Menteri itu, dipanggil kali ketujuh selepas enam sesi soal siasat sejak 19 Februari, dengan setiap sesi berlangsung sekitar enam jam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *