முதுகு அறுவை சிகிச்சைக்குப் பின் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார் இங்க் ஸே யோங்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப்.18- தேசிய ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரரான இங்க் ஸே யோங் கடந்த இரண்டு வாரங்களாகத் தேசிய அணி முகாமில் இலகுவான பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக மலேசியத் தேசிய பூப்பந்து சங்கத்தின் பயிற்சி இயக்குநர் ரெக்ஸி மைனாகி தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு முறை முதுகு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகு ஸே யோங் இன்னும் ஓய்விலிருந்து வருவதாக ரெக்ஸி சொன்னார்.பயிற்சியில் அவர் ஈடுபட்டு வந்தாலும் குறைந்தபட்சம் 1 மணி நேரம் மட்டுமே அவரால் தற்பொழுது விளையாட முடிகிறது.

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸே யோங் அடுத்த ஆண்டு தொடங்கும் உலக பூப்பந்து போட்டிகளில் பங்கேற்க அனுப்பப்படலாம் என்று கூறினார்.

பிப்ரவரியில் ஷா ஆலமில் நடந்த 2024 ஆசிய பூப்பந்து சாம்பியன்ஷிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்க் ஸே யோங் முதுகுவலியால் அவதிப்படுவது முன்னர் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் 2024ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் தனது முதல் ஆட்டத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *