இந்தியர்கள் இனியாவது தெளிவு பெறட்டும்! Zaid Ibrahim வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 28 Mar, 2025
மார்ச் 28,
மலேசிய இந்தியர்கள் மலாய்க்காரர்களுடன் எல்லா வகையிலும் ஒத்துழைப்பார்களே என்றாலும் அரசியல் ரீதியாக இந்தியர்களால் ஒரு தலைமையை அங்கீகரிக்கமாட்டார்கள் என முன்னாள் சட்டத்துறை தலைவர் Datuk Zaid Ibrahim தெரிவித்தார். Masjid India ஆலய விவகாரத்தின் மூலமாக இந்தியர்கள் இனியாவது தங்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் அரசாங்கத்தின் மூலமாக அங்கீகாரத்துடன் பெறுவது குறித்து சிந்திப்பார்கள் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
சட்டத்தின் அடிப்படையில் மலேசியர்களுக்குப் பல்வேறு சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்படும் நிலையிலன மலேசிய இந்தியர்கள் பின்தங்கிய சமூக இருக்க முக்கிய காரணம் நிலையானச் சமூகத் தலைவர்கள் இல்லை என அவர் வலியுறுத்தினார்.
குடும்ப நல மேம்பாடு, பள்ளிக்கூடங்கள் கல்விக்கூடங்களின் மேம்பாடு, சுகாதார மேம்பாடு, வீடமைப்புத் திட்டங்கள் என அடிப்படை வாழ்வியலுக்கான முக்கிய மேம்பாடுகளை அரசு அங்கீகாரத்துடன் பெறுவது குறித்து இந்தியர்களுக்குத் தெளிவு வேண்டும் என்றும் பின்தங்கியிருக்கும் நிலையிலிருந்து அவர்கள் மேம்பட வேண்டும் என முன்னாள் சட்டத்துறை தலைவர் Datuk Zaid Ibrahim வலியுறுத்தினார்.
Datuk Zaid Ibrahim menegaskan masyarakat India di Malaysia perlu jelas mengenai hak dan keistimewaan yang boleh diperoleh melalui kerajaan. Isu kuil Masjid India diharap menyedarkan mereka tentang kepentingan pengiktirafan dalam pembangunan komuniti, pendidikan, kesihatan, dan perumahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *