குளிர்சாதனப் பெட்டியில் சிறுத்தையின் தலையைப் பதப்படுத்திய மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 20 Mar, 2025
மார்ச் 20,
காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாகச் சந்தேகிக்கப்பட்ட மூவரைக் கைது செய்யும் நடவடிக்கையின் போது அவர்கள் தங்கியிருந்த கடையின் குளிர்சாதனப் பெட்டியில் சிறுத்தையின் தலை பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாகப் பகாங் மாநில வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Datuk Abdul Kadir Abu Hashim தெரிவித்தார்.
கேமரன்மலையில் உள்ள காடுகளில் சம்மந்தப்பட்ட மூவரும் சுற்றித்திரிந்ததாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்கள் தங்கியிருந்த கடையைச் சோதனையிடும் போது சிறுத்தையின் தலை கண்டுப்பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூவரும் 38 முதல் 68 வயதுள்ள உள்ளூர் நபர்கள் என அவர் தெரிவித்தார்.
Tiga lelaki ditahan kerana disyaki memburu haram selepas pihak berkuasa menemui kepala harimau kumbang yang diawet dalam peti sejuk kedai mereka di Pahang. Mereka dipercayai berkeliaran di hutan Cameron Highlands sebelum ditangkap dalam serbuan Jabatan Perlindungan Hidupan Liar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *