பாரதி தமிழ்ப்பள்ளிக்கான 45ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி சிறந்த வரவேற்புடன் நடைபெற்றது!

top-news
FREE WEBSITE AD

டிகே.மூர்த்தி

பாகான் டத்தோ, அக்.17-

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடியின் நெடுநாளைய திட்டம் நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தோற்றம் பெற்றுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 200 மாணவர்களைக் கொண்டுள்ள பாரதி தமிழ்ப்பள்ளிக்கான 45ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி சிறந்த வரவேற்புடன் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

போட்டியை மாவட்ட அம்னோ உதவித் தலைவரும், ஊத்தான் மெலிந்தாங் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ கைருடின் தர்மிஷி முறையாக தொடக்கி வைத்தார்.இவ்வரங்கில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்ட பள்ளிகளில் பாரதி தமிழ்ப்பள்ளியே முதலாவது தமிழ்ப்பள்ளியாகக் கால்பதித்துள்ளது. இதன் வழி பெற்றோர்களின் மத்தியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பலரின் பாராட்டினைப் பெற்றுள்ளது.

இப்போட்டியில் மழலையர் வகுப்பு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மொத்தம் 200 மாணவர்கள் 25 ஆசிரியர்கள் பங்குகொண்டனர். ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்குமே போட்டியில் பங்குகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் மூலம் ஒவ்வொருவருக்கும் வெற்றிப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இதர தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் 6 ஆசிரியர்கள் நட்புக்காக நடுவர்களாகவும் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்த போட்டிகளின் மூலம் வெற்றி வீரராக ருத்திரன் சசிகுமார் மற்றும் வீராங்கனையாக யோஷினி சந்திரசேகரன் இருவரும் முறையாக இந்த 45 ஆவது விளையாட்டுப் போட்டியில் தேர்வு பெற்றுள்ளனர்.

தனி நபர் போட்டியாக 100 மீட்டர், 250 மீட்டர் நேர் ஓட்டம், உயரும் தாண்டுதல், நீளம் தண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போன்று தனி நபர் போட்டிகளில் ஆண்-பெண் இருபாலரும் பங்குகொண்ட நிலையில் தங்களின் தனித்திறமையை முன்னெடுத்திருந்தனர் என்பது பாராட்டுக்குரியது. இறுதியாக வெற்றி ஒன்றே இலக்கு என்று களமிறங்கிய மஞ்சள் அணியே 662 புள்ளிகள் பெற்று வெற்றிக் கிண்ணத்தைத் தன் வசமாக்கியது. பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதன் அடிப்படை நோக்கம் என்னவென்றால், மாணவர்கள் உடல்வலிமையை வெளிப்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இளைஞர் விளையாட்டு பண்பாட்டு அமைச்சகம் நாடளவில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்கு ஏற்றபடி விளையாட்டுப் போட்டிகள் நடத்திவருகிறது.

பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு தான் விளையாட்டுப் போட்டிகள் தனிப்பெருமை அடைவதற்கு முதன்மையானது. பகல் 2.00 மணியளவில் போட்டிக்கான நிகழ்ச்சி அட்டவணையின்படி பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான ஸாஹிட் ஹமிடியின் இந்தியப் பிரிவின் பொறுப்பாளர் அ.அரவிந்தன் விளையாட்டுப் போட்டியை முடித்து வைத்தார்.விளையாட்டுப் போட்டிக்கு எல்லா வகையிலும் ஆதரவு கொடுத்துள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்குப் பள்ளி நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *