ஆசிரியர் பயிற்சிக்கு கல்வி அமைச்சு முன்னுரிமை அளிக்க வேண்டும்! – அன்வார்

- Shan Siva
- 21 Mar, 2025
புத்ராஜெயா, மார்ச் 21: ஆசிரியர்களின் பயிற்சிக்கு கல்வி அமைச்சு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்வி அமைச்சின் உயர்
நிர்வாகக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய
பிரதமர் இவ்வாறு கூறியதாக அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பள்ளிகளில்
கல்விச் சூழலை மாற்றக்கூடிய மாற்றத்தின் முகவர்கள் ஆசிரியர்கள் என்று அன்வார்
கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வியைப்
பொறுத்தவரை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு முக்கிய பிரச்சினைகள், சீர்திருத்தங்கள் மற்றும் தேவைகள் குறித்து
கவனம் செலுத்துவதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கல்வி மூலம் பயிற்சி பெற்ற மற்றும் தொழில்முறை பணியாளர்களைத் உருவாக்குவது கல்வி அமைச்சின் பொறுப்பு. அதோடு அனைத்து பள்ளி மாணவர்களும் பஹாசா மலாய் மொழியைக் கற்றுக்கொள்வதை உறுதி செய்வதோடு, ஆங்கிலத்தையும் மேம்படுத்துவதையும் கல்வி அமைச்சு உறுதி செய்ய வேண்டும் என்று அன்வார் விரும்புவதாக அமைச்சு தெரிவித்துள்ளது!
Perdana Menteri Anwar Ibrahim menggesa Kementerian Pendidikan memberi keutamaan kepada latihan guru kerana mereka adalah ejen perubahan di sekolah. Beliau menekankan keperluan reformasi pendidikan dan memastikan semua pelajar menguasai Bahasa Melayu serta meningkatkan kemahiran dalam Bahasa Inggeris
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *