மாநில அளவில் வாழ்ந்து வரும் பூர்வகுடியினர் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்!

- Muthu Kumar
- 29 Mar, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
ஷா ஆலம் மார்ச் 29-
சிலாங்கூர் மாநில அளவில் கிராமப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பூர்வ குடியினரின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு அவர்களது நலன்
பாதுகாக்கப்படும் என்று மனிதவள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்தார். அதே வேளையில், பூர்வ குடியினரின் பிள்ளைகள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
மாநில அரசின் பி 40 பிரிவின் கீழ் ஏழ்மையில் இருப்போர் திட்டத்தில் பூர்வ குடியினரில் பெரும்பாலோர் தரமான வாழ்வாதாரம் ஏதுமின்றி அவர் கள் வாழ்ந்து வரும் கிராமப் பகுதிகளில் தேவையான உணவுப் பொருட்களை சுயமாகப் பயிரிட்டு வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
இவர்களது நலனைக் கேட்டறிந்து செயல்படும் நோக்கத்தில் மாநில பூர்வகுடியினர் இலாகா தமது ஆலோசனைப்படி தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக பாப்பா ராய்டு தெரிவித்தார்.
அரசு செயலகத்தில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பூர்வ குடியினர் இலாகா மக்கள் நலப் பிரிவு அதிகாரி புவான் இடாயுஅமிமா இப்ராஹிம் மற்றும் யுபேன் துணை இயக்குநர் புவான் ரஹாயு அலி இருவரும் கருத்துப் பரிமாற்றத்தின் போது மாநில அளவில் இருக்கும் பூர்வகுடி மக்களின் தேவைகளை அறிந்து அதற்கான உதவிகளை முன்னெடுப்பதாக தம்மிடம் உறுதி அளித்ததாக அவர் கூறினார்.
Kerajaan negeri Selangor komited meningkatkan taraf hidup Orang Asli dengan memastikan kebajikan, pendidikan, dan peluang pekerjaan mereka dijaga. Pihak berkuasa terus menyalurkan bantuan serta mendengar keperluan masyarakat ini melalui perbincangan dan inisiatif berterusan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *