மத நல்லிணக்கத்திற்கு எதிரானக் கருத்துகளை நிறுத்துவீர்!

- Sangeetha K Loganathan
- 30 Mar, 2025
மார்ச் 30,
பிறரின் இறை நம்பிக்கை குறித்து தவறானக் கருத்துகளைப் பகிர்வதை நிறுத்தும்படி நாடாளுமன்றச் சபாநாயகர் Tan Sri Johari Abdul இன்று வலியுறுத்தினார். காவல்துறையின் நோன்புப் பெருநாள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற அவர் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் கருத்துகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என வலியுறுத்தினார்.
பிற மதங்கள் தொடர்பாகத் தவறானக் கருத்துகளை வெளியிடும் ஒரு சில தனிநபர்களின் செயல் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிப்பதாகவும் இதனால் பாதுகாப்பற்ற சூழல் உருவாகுவதாகவும் அவர் தெரிவித்தார். அவரவர் நம்பிக்கையில் தெளிவாக இருங்கள் அது போதும். பிறர் நம்பிக்கை குறித்து தவறானக் கருத்துகளையும் தெளிவற்ற கருத்துகளையும் பகிர வேண்டாம் என்றும் நாடாளுமன்றச் சபாநாயகர் Tan Sri Johari Abdul வலியுறுத்தினார்.
Tan Sri Johari Abdul menegaskan agar individu menghentikan penyebaran kenyataan yang mencetuskan ketegangan agama. Beliau menekankan kepentingan menghormati kepercayaan orang lain bagi mengekalkan keharmonian masyarakat serta mengelakkan persekitaran yang tidak selamat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *