பிரதமரின் பதவிக் காலம் பத்தாண்டுகள்- பரிந்துரையை அமைச்சரவை விரிவாக ஆராயும்- ஃபாமி!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 20-

பிரதமர் பதவியைப் பத்தாண்டுகளுக்கு வரையறுக்கக் கோரும் பரிந்துரையை விரிவாக ஆராய வேண்டும் என்று அமைச்சரவையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பணித்துள்ளார் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி பாட்ஸில் நேற்று தெரிவித்தார். அப்பரிந்துரையைச் செயல்படுத்த கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியிருக்கும். ஆகவே, அதனை மிக கவனமாக ஆராய வேண்டியுள்ளது என அன்வார் கூறியதாக ஃபாமி சொன்னார்.

அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரமும் கவனமாகவும் மிக விரிவாகவும் ஆராயப்பட வேண்டியவை என்று பிரதமர் கருதுவதாக புத்ராஜெயாவில் அமைச்சரவைக்குப் பிந்திய செய்தியாளர் சந்திப்பில் ஃபாமி கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜசெகவின் பதினெட்டாவது தேசிய பொதுப்பேரவையில் அந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டது. அதனை தமது தலைமையிலான பிகேஆர் கட்சியும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் ஆதரிப்பதாக அன்வார் அப்போது தெரிவித்திருந்தார்.

ஆயினும், அது பற்றி நேற்று மேலும் விவரித்த அன்வார், பிரதமரின் பதவிக் காலத்தை இரண்டு தவணைகளுக்கு அதாவது பத்தாண்டுகளுக்கு வரையறுக்க கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும் என்று சுட்டிக் காட்டினார்.

Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim mengarahkan Kabinet mengkaji secara mendalam cadangan mengehadkan tempoh jawatan Perdana Menteri kepada 10 tahun. Beliau menegaskan pindaan Perlembagaan Persekutuan diperlukan dan memerlukan sokongan dua pertiga di Parlimen untuk dilaksanakan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *