அருள்மிகு முருகன் ஆலய நிர்வாகம் நிலச் சட்டத்தின் நியாயத்தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்!

- Muthu Kumar
- 27 Mar, 2025
(டிகே.மூர்த்தி)
ஈப்போ, மார்ச் 27-
ஆலய பதிவுகள் அவற்றின் நில விவகாரங்கள் மற்றும் அவை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனிக்க ஒரு கண்காணிப்பு குழு நிறுவப்பட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளை யார் கூறியது என்ற எந்த அடையாளமும் இல்லாமல் இந்து சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் கூறினார்.
இதன் மூலம் இந்து சங்கம் தாங்களாகவே தங்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டனரா? என்னும் கேள்வி எழுகிறது. இவர்கள் மாவட்ட ரீதியாக பல நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வந்துள்ளனர். வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
1960 ஆம் ஆண்டையும், 2025 ஆம் ஆண்டையும் நாம் ஒப்பிட முடியாது. இக்காலகட்டத்தில் நிறைய மாற்றங்களும், விழிப்புணர்வும் வந்துவிட்டன. தோட்ட பாட்டாளி சமூகம் இன்று கல்வி கற்றவர்களாக உருமாற்றம் பெற்றுள்ளோம். ஆலயத்திற்கு வரும்போது பெண்கள் சேலையுடனும், ஆண்கள் வேட்டியுடனும் வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
ஆலயப் பொறுப்பாளர்களுக்கு கடமை என்று ஒன்று உள்ளது. அதனை செய்யத் தவறும்போது தான் பிரச்சினை தலை தூக்குகிறது. கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 11 இன் கீழ் நமக்கு உரிமை உண்டு என்றும் அந்த இடத்தில் பல காலமாக இருந்துள்ளோம், ஆலயத்தை இங்கிருந்து அகற்ற முடியாது என்றும் சர்ச்சையை ஏற்படுத்துவது சிந்தனைக்கு எட்டாத கருத்தாகும் என்றார் சிவநேசன்.
இதற்கு முதல் உதாரணமாக 80 ஆண்டு கால சித்தியவான் அருள்மிகு முருகன் ஆலயத்திற்கு ஏற்பட்டது. முறைப்படி இந்த கோவில் அமைந்துள்ள நிலம் சட்ட ரீதியாக நிர்வாகத்திற்கு சொந்தமாக இருந்துள்ளது. ஆனால், நிலவரி முறையாக செலுத்த தவறியதால், நில அலுவலகம் அந்த நிலத்தை பறிமுதல் செய்து விட்டது.
நில அலுவலகம் முதலில் நினைவு கடிதம் கொடுக்கிறது. அடுத்த கட்டமாக எச்சரிக்கைக் கடிதம் வழங்கியும் பொருட்படுத்தாமல் இருந்ததால், இறுதியாக வேறுவழியின்றி அந்த நிலத்தை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளது. இந்த உ நிர்வாக அரசியல் ஆலய நிர்வாகத்தில் அரசின் பெரும்புள்ளியும் இருந்துள்ளார். அவர் இருக்கும்போது கோவிலுக்கு ஆபத்து கிடையாது என்று இருந்துள்ளனரா? என்பது தெரியவில்லை. ஆனாலும், நிலம் பறிமுதல் செய்யும் நிலைக்கு ஆலயம் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியது என்பது தான் உண்மை என்றும் சிவநேசன் குறிப்பிட்டார்.
Malaysian Hindu Association mencadangkan penubuhan jawatankuasa pemantau isu kuil dan tanahnya. Sivanesan mempersoalkan keperluan ini, menekankan tanggungjawab pengurusan kuil. Beliau memberi contoh kuil Sitiawan yang kehilangan tanah kerana gagal membayar cukai, menyebabkan rampasan kerajaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *