இனி இவை கெடாவின் தடைசெய்யப்பட்ட நாய் இனங்கள்!

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், ஏப்ரல் 4: கெடாவின் தடைசெய்யப்பட்ட ஆபத்தான நாய் இனங்களின் பட்டியலில் Rottweilers, Dobermans, Canary Dogs, German Shepherds, Bull Terriers மற்றும்  Bull Mastiffsசேர்க்கப்பட்டுள்ளதாக மாநில கால்நடை சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

ஹரி ராயா ஐடில்ஃபிட்ரியின் இரண்டாவது நாளில், கோலா கெட்டில், தாமன் தேசா பிடாராவில் இரண்டு Rottweilers நாய்கள் நடத்திய தாக்குதலால் ஐந்து பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இவ்வகை இனங்கள் கட்டுப்படுத்தப்பட்டவை என துறையின் வலைத்தளம் பட்டியலிடுகிறது.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்கள் தேவை என்று மாநில வீட்டுவசதி, உள்ளூர் அரசு மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் மன்சோர் ஜகாரியா கூறினார்.

கால்நடை சேவைகள் துறையால் அடையாளம் காணப்பட்ட சில இனங்களை வீட்டுப் பகுதிகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கக்கூடாது என்றும், இந்த நாய்கள் அண்டை வீட்டாருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன  என்றும் அவர் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால், தற்போதுள்ள உரிமங்களும் மதிப்பாய்வு செய்யப்படலாம் என்று அவர் கூறினார்.

குடியிருப்புப் பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்பு இனங்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை வரைவு செய்வதாக அவர் அறிவித்தார்.

Dua anjing Rottweiler menyerang lima individu di Kedah mendorong tindakan pihak berkuasa menyenarai enam baka anjing, termasuk Rottweiler dan Doberman, sebagai berbahaya. Kerajaan negeri merancang garis panduan baharu untuk melarang baka ini dipelihara di kawasan perumahan demi keselamatan awam dan mempertimbangkan semula lesen sedia ada.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *