ஹங்கேரியில் இன்று தொடங்கும் செஸ் ஒலிம்பியாட்!
- Muthu Kumar
- 11 Sep, 2024
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 45வது சீசன் இன்று துவங்குகிறது. இந்திய ஆண், பெண்கள் அணிகள் மீண்டும் பதக்கம் வெல்ல காத்திருக்கின்றன.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 45வது சீசன் இன்று முதல் செப். 23 வரை ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடக்க உள்ளது. ஓபன் பிரிவில் 191, பெண்கள் பிரிவில் 180 அணிகள் பங்கேற்க காத்திருக்கின்றன.
ஓபன் பிரிவில் 'நம்பர்-1' ஆக உள்ள அமெரிக்கா அணியில் சோ வெஸ்லே, லெவான் ஆரோனியன் என அனுபவ வீரர்கள் இருப்பது இத்தொடரில் விளையாடவிற்கும் மற்ற வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
செஸ் ஒலிம்பியாட் தொடர் 98 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஹங்கேரியில் நடக்க உள்ளது. இதற்கு முன் 1926 ஆம் ஆண்டில் ஹங்கேரியில் இத்தொடர் நடந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *