சிறுவர்களைத் துன்புறுத்திய பெண்ணுக்கு அபராதத்துடன் 10 மாதங்கள் சிறை!

- Sangeetha K Loganathan
- 19 Mar, 2025
மார்ச் 19,
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 5 வயது 6 வயதுள்ள 4 சிறுவர்களைத் துன்புறுத்திய பராமரிப்பு மையத்தின் பெண் பணியாளருக்கு RM 20,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் 10 மாதங்கள் சிறைதண்டனையும் இன்று Sesyen நீதிமன்றம் விதித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாராமரிப்பு இல்லத்தில் 2 சிறுவர்களையும் உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஆதாரத்துடன் கைது செய்யப்பட்ட 21 வயது இளம் பெண் தன் மீதானக் குற்றத்தை மறுத்த நிலையில் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் Sesyen நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது.
துன்புறுத்தலுக்குள்ளான 4 சிறுவர்களும் தற்போது உடல் நலத்துடன் இருப்பதை நீதிமன்றம் உறுதிச் செய்துள்ளதாகவும் நீதிபதி Ku Hayati Ku Haron தெரிவித்தார். 10 மாதங்கள் சிறைக்குப் பின்னர் 6 மாதக் காலத்துக்குள் 120 மணி நேரங்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளும்படியும் 2 ஆண்டுகள் நன்னடத்தைச் செயல்பாடுகளையும் மேற்கொள்ளும்படி Sesyen நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Seorang wanita berusia 21 tahun dihukum penjara 10 bulan dan denda RM20,000 kerana mendera empat kanak-kanak berusia lima dan enam tahun di pusat jagaan. Selepas hukuman penjara dia diwajibkan menjalani 120 jam khidmat masyarakat dalam tempoh dua tahun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *