ஹரி ராயாவின் முதல் இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

- Muthu Kumar
- 30 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 30
நோன்புப் பெருநாளின் முதல் இரண்டு நாட்களில், நாட்டின் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று. மலேசிய வானிலை ஆய்வு இலாகா மெட்மலேசியா கணிப்புத் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் திங்கள்கிழமை காலையில் நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர். கிளந்தான், திரெங்கானு மற்றும் சரவாக்கிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். "அன்றைய தினம் பிற்பகலில் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜொகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மாலையில் பகாங் மற்றும் சபாவில் சில இடங்களில் அத்தகைய நிலை நிலவக் கூடும் என்று மெட்மலேசியா கூறியது.
ஏப்ரல் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான். மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.'பிற்பகலில் பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜொகூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலையில் பகாங், திரெங்கானு மற்றும் சபாவில் சில இடங்களில் அத்தகைய நிலை நிலவக் கூடும்" என்று மெட்மலேசியா தெரிவித்தது.
Meteo Malaysia meramalkan hujan ribut petir di beberapa negeri pada dua hari pertama Aidilfitri. Pada Isnin, hujan dijangka di Negeri Sembilan, Melaka, Johor, Kelantan, Terengganu dan Sarawak. Pada Selasa, hujan melanda Selangor, Perlis, Kedah, Perak, Pahang, Sabah dan beberapa negeri lain, terutama pada petang dan malam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *