எட்டு மாநிலங்களில் மடானி நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!

- Muthu Kumar
- 28 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 28-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எட்டு மாநிலங்களில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை நடத்தவுள்ளார். அவற்றில், இவ்வாண்டுக்கான தேசிய அளவிலான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் ஏப்ரல் 5ஆம் தேதி மலாக்காவில் நடத்தப்பட விருக்கிறது.
சிலாங்கூரில் ஏப்ரல் 6ஆம் தேதியும், பகாங்கில் ஏப்ரல் 11ஆம் தேதியும், கிளந்தான் மற்றும் பினாங்கில் ஏப்ரல் 12ஆம் தேதியும், சரவாக்கில் ஏப்ரல் 19ஆம் தேதியும், பேராக்கில் ஏப்ரல் 25ஆம் தேதியும் பெர்லிஸில் ஏப்ரல் 27ஆம் தேதியும் அன்வார் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை நடத்த விருப்பதாக அவரின் மூத்த பத்திரிகை செயலாளர் துங்கு நஷ்ருல் துங்கு அபைடா தெரிவித்தார்.
இக்கொண்டாட்டங்கள் குறித்த மேல் விவரங்கள் பிரதமர் இலாகாவினால் பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். “கடந்த ஆண்டைப் போலவே, மடானி நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களினால் கூட்டாகச் சேர்ந்து ஏற்பாடு செய்யப்படும்.
அக்கொண்டாட்டங்களில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மந்திரி பெசார்களும் முதலமைச்சர்களும் கலந்து கொள்வார்கள்" என்று அவர் கூறினார். இக்கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அனைத்து இன மக்களுக்கும் அன்வார் அழைப்பு விடுத்திருப்பதாக, துங்கு நஷ்ருல் தெரிவித்தார்.
Perdana Menteri Anwar Ibrahim akan mengadakan sambutan rasmi Aidilfitri di lapan negeri, dengan peringkat nasional pada 5 April di Melaka. Sambutan turut diadakan di Selangor, Pahang, Kelantan, Pulau Pinang, Sarawak, Perak, dan Perlis. Semua rakyat dijemput hadir.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *