ஆலய இடமாற்றத்திற்கு வெ.20 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்கியதா?அமைச்சர் ஜலீஹா மறுப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 27-

தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை இடமாற்றம் செய்வதற்கு அந்த ஆலய நிர்வாகத்திற்கு அரசாங்கம் இருபது லட்சம் வெள்ளியை இழப்பீடாக வழங்கியுள்ளது என்று கூறப்படுவதை கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலீஹா முஸ்தாபா நேற்று மறுத்தார்.

அக்குற்றச்சாட்டு முற்றிலும் தவறாகும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் ஜலீஹா தெரிவித்துள்ளார்.அந்த ஆலயத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அரசாங்கம் வாக்குறுதி அளித்ததில்லை அல்லது அதற்கு ஒப்புதலும் அளித்ததில்லை. நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்ட இணக்கத்திற்கு அப்பாற்பட்டு வேறு எந்த உடன்பாடும் ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.

அந்த ஆலயம் 4,000 சதுரஅடி பரப்பளவு கொண்ட நிலத்தை பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாது இருபது லட்சம் வெள்ளி இழப்பீட்டையும் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. அது குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று சுயேச்சை மதப் போதகர் ஃபிர்டாவுஸ் வோங் நேற்று முன்தினம் தமது முகநூல் பக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு பதிலளித்தபோது ஜலீஹா அந்த விளக்கத்தை அளித்தார்.

கோலாலம்பூரில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள அந்த ஆலயம் புதிய பள்ளிவாசல் நிர்மாணிப்பிற்காக அங்கிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று ஜலீஹா நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார்.எல்லாத் தரப்பினரிடமும் கலந்தாலோசித்த பிறகே அனைவருக்கும் ஏற்புடைய வகையில் அம்முடிவு எடுக்கப்பட்டது என்றும் ஜலீஹா நேற்று தெரிவித்தார்.

Menteri Wilayah Persekutuan, Dr. Zaliha Mustafa menafikan dakwaan kerajaan memberi RM2 juta pampasan kepada kuil Dewi Sri Badrakaliamman untuk pemindahan. Beliau menegaskan tiada janji atau kelulusan diberikan dan keputusan pemindahan dibuat selepas perbincangan dengan semua pihak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *