நிபோங் தெபால் பிகேஆர் தொகுதித் தேர்தல்; தலைவருக்கு ஃபட்லினா சிடேக்!மகளிர் தலைவிக்கு நூர் சகிலா!

- Muthu Kumar
- 06 Apr, 2025
(தி.ஆர்.மேத்தியூஸ்)
நிபோங் தெபால், ஏப். 6-
இவ்வாண்டு நடைபெறவிருக் கும் நிபோங் தெபால் பிகேஆர் கட்சித் தொகுதித் தேர்தலில், பல புதிய முகங்களோடு பழைய முகங்களான இந்தியர்கள் பலர் போட்டியிடுகின்றனர். இவர்களோடு கல்வி அமைச்சரும், நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபட்லினா சிடேக் நிபோங் தெபால் பிகேஆர் தொகுதித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
முதன் முறையாக இத்தொகுதியில் அவர் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தொகுதியின் துணைத் தலைவர் பதவிக்கு, சுங்கை பாக்காப் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நிபோங் தெபால் பிகேஆர் தொகுதியின் முன்னாள் தலைவருமான டாக்டர் அமார் பிரிட்டால் அப்துல்லா போட்டியிடுகிறார்.
மகளிர் தலைவிக்கு நடப்புத் தலைவி நூர் சகிலா பிந்தி அப்துல்லா, துணைத் தலைவிக்கு முஸ்லிஹா பிந்தி அப்துல் ரஹிம், உதவித் தலைவி பதவிக்கு கோமளா த/பெ ஆறுமுகம், செயலவை உறுப்பினர் பதவிக்கு புருஷோத்தமன் த/பெ நடராஜன், அமுதவள்ளி த/பெ சரவணன், நிர்மலா த/பெ பொன்னன், தர்மாயி த/பெ உலகநாதன்,அறிவேந்திரன் த/பெ பூங்கான் நாகேஸ்வரி த/பெ மாரிமுத்து மற்றும் பூங்கொடி த/பெ பெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 15 பேர் பிகேஆர் தொகுதி செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேளையில், இளைஞர் பிரிவின் செயலவை உறுப்பினர் பதவிக்கு தீபமுனீஸ் த/பெ முனியாண்டி என்பவர் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tahun ini, pilihan raya cabang PKR Nibong Tebal menyaksikan penyertaan ramai calon termasuk menteri pendidikan Fadhlina Sidek. Calon terdiri daripada muka lama dan baru, termasuk ramai masyarakat India, bersaing untuk pelbagai jawatan penting dalam parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *