இவ்வாண்டு முதல் காலாண்டில் ரிம106 மில்லியன் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்!

- Muthu Kumar
- 26 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 26-
இவ்வாண்டு முதல் காலாண்டில் நாடு முழுமையிலும் மேற்கொள்ளப்பட்ட மொத்தம் 60 நடவடிக்கைகளின்போது, 10 கோடியே 60 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பலவகையான பட்டாசுகளை போலீசார் கைப்பற்றி இருப்பதுடன் 68 பேரை கைது செய்திருக்கின்றனர்.
மொத்தம் 68 சம்பவங்களில் ஐந்து சம்பவங்களில் மட்டும் 4 கோடியே 85 லட்சத்து 2 ஆயிரத்து 220 வெள்ளி மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் உசேன் தெரிவித்தார்.
நாட்டிற்குள் கடத்தப்பட்டிருந்த பட்டாசுகளில் ஹெப்பி பூம் கேக், ஹெப்பி பூம் கிரேக்கர் 8 அங்குலம், ஹெப்பி பூம் அசோர்டட் செலெப்ரேஷன் ரெட் ஃபையர் கிரேக்கர், ஹெப்பி பூம் ஷூட் கேக் ஆகியவையும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
உள்ளூர் சந்தைகளில் கிடைப்பது மிகச் சிரமமாக இருப்பதால், இத்தகைய பட்டாசுகளுக்கான தேவை பெருநாள் காலங்களில் மிக உயர்வாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதிகாரத் தரப்பினரிடம் சிக்கிக் கொள்வதை தவிர்ப்பதற்காக, கடத்தல் கும்பல்கள் பல உக்திகளைப் பின்பற்றி வருகின்றனர். தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கு குறிப்பாக, பாடாங் பெசார் மற்றும் புக்கிட் காயூ ஈத்தாமிற்கு இடையில் பயன்படுத்தப்பட்டு வரும் சட்டவிரோத எல்லைப் பாதைகளை அக்கும்பல்கள் பயன்படுத்தி வருவதும் அவற்றில் அடங்கும்.
எல்லை வழியான கடத்தலைத் தவிர்த்து, சரக்கு லோரிகள் மற்றும் விரைவு பஸ்கள் மூலமும் அக்கும்பல்கள் பட்டாசுகளை நாட்டிற்குள் கடத்தி வருவதாக, ரஸாருடின் தெரிவித்தார்.சில கும்பல்கள் சிறு படகுகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மூலமும் பட்டாசுகளைக் கடத்தி வருவதும் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
Pada tahun ini, polis merampas pelbagai jenis mercun bernilai RM10.6 juta dan menahan 68 individu dalam 60 operasi di seluruh negara. Sindiket penyeludupan menggunakan pelbagai taktik, termasuk laluan haram sempadan Thailand-Malaysia serta lori kargo dan bot.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *