விமானத்தில் கோளாறு! அவசர அவசரமாகத் தரையிறங்கிய ஏர் ஆசியா விமானம்

- Shan Siva
- 27 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 27: சீனாவின் ஷென்சென் நோக்கிச் சென்ற ஏர் ஏசியா
விமானத்தின் வலப்புற எந்திரத்தில் தீ ஏற்பட்டதால், நள்ளிரவுக்குப் பிறகு KLIA2 விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரவு 10.37 மணிக்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், உடனடியாக ரன்வே 3 இல் ஒன்பது பணியாளர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு
இயந்திரத்தை அனுப்பியதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி
இயக்குநர் (செயல்பாடுகள்) அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.
இரவு 9.59 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் அதிகாலை 12.08 மணிக்கு
வெற்றிகரமாக தரையிறங்கியதாக அவர் கூறினார்.
இந்நிலையில், விமானத்தில் இருந்த 171 பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர் என்று அவர் இன்று காலை ஓர்அறிக்கையில் தெரிவித்தார்.
Pesawat AirAsia ke Shenzhen melakukan pendaratan cemas di KLIA2 selepas enjin kanan terbakar. Pasukan bomba bertindak segera di landasan. Pesawat yang berlepas pada 9.59 malam mendarat selamat pada 12.08 pagi, dengan 171 penumpang dan kru tidak terjejas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *