நான் அம்னோவின் விசுவாசி! கட்சியிலிருந்து நான் விலகவில்லை! – ISMAIL SABRI விளக்கம்!

- Sangeetha K Loganathan
- 23 Mar, 2025
மார்ச் 23,
சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob தாம் அம்னோவிலிருந்து வெளியேறுவதாகவும் ஒற்றுமைக் கூட்டணிக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்வதாகவும் வெளிவந்துள்ள செய்தியை மறுத்தார். ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் (SPRM) விசாரிக்கப்பட்டதால் ஒற்றுமை அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்து வெளியேறுவதாகக் காணொலி வெளியானதற்கும் தமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என Datuk Seri Ismail Sabri Yaakob இன்று விளக்கமளித்தார்.
லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் (SPRM) நடத்தப்பட்ட விசாரணைக்கு முழுமையாகத் தாம் ஒத்துழைப்பதாகவும் என்னுடன் இருந்தவர்கள் செய்த குற்றத்திற்காகத் தன்னை விசாரித்ததாகவும் இதற்கும் அரசியலுக்கும் கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார். நான் விசுவாசமான அம்னோக்காரன் என்பதைப் பல சூழ்நிலைகளில் நிரூபித்துள்ளேன். அது கட்சிக்கு நன்கு தெரியும் என முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தாம் வழங்கியிருக்கும் ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
Bekas Perdana Menteri, Datuk Seri Ismail Sabri Yaakob menafikan keluar dari UMNO dan menarik balik sokongan terhadap kerajaan perpaduan. Beliau menegaskan kes SPRM terhadapnya tiada kaitan dengan politik dan akan terus setia kepada parti serta kerajaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *