வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சனையாக்காதீர்! தலைவர்கள் தீர்வைக் காணுங்கள்! - Senator Saraswathy Kandasami
.jpg)
- Sangeetha K Loganathan
- 25 Mar, 2025
மார்ச் 25,
தலைநகரில் அமைந்துள்ள Dewi Sri Pathrakaliamman ஆலய விவகாரத்தை ஒற்றுமை அரசாங்கம் சுமூகமாகத் தீர்வுக் கண்டுள்ள நிலையில் இந்த தீர்வு நியாயமானதாகவும் பிறநலன்களை மதிக்கும்படியாகவும் அமைந்திருப்பதாக ஒற்றுமை துறை துணை அமைச்சர் Senator Saraswathy Kandasami தெரிவித்தார். கோயில் தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் துரத்தில் 4000 சதுர அடி பரப்பளவில் கோயிலுக்கான நிரந்தர இடம் வழங்கப்பட்டிருப்பதையும் அவர் மேற்கோள்காட்டினார்.
இந்த தீர்வை முன் உதாரணமாகக் கொண்டு இன மத விவகாரங்களைத் தூண்டும் வகையில் எந்த தரப்பினர்களும் செயல்பட வேண்டாம் என்றும் இது தொடர்பானச் சர்ச்சைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இடமாற்றம் செய்யப்படும் வரையில் Dewi Sri Pathrakaliamman வழக்கம் போல் செயல்படும் என்றும் இதில் எந்தவொரு தரப்பினரும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை முன்வைக்க வேண்டாம் என்றும், இந்த விவகாரம் சுமூகமாகத் தீர்கப்பட்டதில் பெரிதும் நிம்மதியளிப்பதாக ஒற்றுமை துறை துணை அமைச்சர் Senator Saraswathy Kandasami தெரிவித்தார்
Timbalan Menteri Perpaduan, Senator Saraswathy Kandasami, menegaskan isu kuil Dewi Sri Pathrakaliamman telah diselesaikan secara adil. Beliau menggesa semua pihak menghentikan polemik dan memastikan pemindahan ke tapak baharu seluas 4,000 kaki persegi berjalan lancar tanpa mencetuskan ketegangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *