உங்கள் வீட்டில் மசூதியைக் கட்டி! உங்களை வெளியேற சொல்கிறோம்!

- Sangeetha K Loganathan
- 23 Mar, 2025
மார்ச் 23,
தலைநகரில் அமைந்துள்ள Dewi Sri Pathrakaliamman ஆலயம் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் இருப்பதைத் தெரிந்தும் அதனை வேறு இடத்திற்கு மாற்றாமல் கூச்சலிட்டுக் கொண்டிருக்காதீர்கள் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து சமூகங்களின் சமயத் தலங்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் அடுத்தவர் நிலத்தில் கோயிலை அமைத்துக் கொண்டு வெளியேறமாட்டோம் என அடம்பிடிப்பதில் என்ன நியாயம் என Datuk Dr Muhamad Akmal Saleh கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்தவர் நிலத்தில் கட்டப்படும் கோயிலுக்கு ஆதரவாகப் பேசுபவர்களின் வீட்டில் நான் மசூதியைக் கட்டுகிறேன். கட்டப்பட்ட மசூதியைப் பராமரிக்க அவர்கள் வீட்டிலிருந்து அவர்களை வெளியேறும்படி நான் வலியுறுத்தினால் அது நியாயமாக இருக்குமா எனும் கேள்வியையும் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh முன்வைத்துள்ளார்.
கோயிலோ வீடோ! எதுவாக இருந்தாலும் சொந்த நிலத்தில் கட்டுங்கள். அடுத்தவர் நிலத்தில் கட்டிவிட்டு உரிமை என பிதற்றக் கூடாது என Dewi Sri Pathrakaliamman ஆலயத்திற்காகச் சட்டப்படி குரல் எழுப்பிய வழக்கறிஞர்களுக்கு அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh வலியுறுத்தினார்.
Ketua Pemuda UMNO Datuk Dr. Muhamad Akmal Saleh menegaskan bahawa kuil Dewi Sri Pathrakaliamman dibina di tanah persendirian tanpa kebenaran dan harus dipindahkan. Beliau menekankan kepentingan membina tempat ibadat di tanah sendiri bukan di tanah orang lain
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *