Sekinchan மீனவர் துறைமுகத்தில் தீ!

top-news

மார்ச் 25,

Sekinchan மீனவர் துறைமுகத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 2 மீன் ஜெட்டிகள் தீயில் கருகியதாகவும் படகுகள், மிகுந்த சேதத்திற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக் குறித்து காலை 8.57 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதும் 17 தீயணைப்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். 

மீன் ஜெட்டிகளும் படகுகளும் 80% தீயில் கருகியதாகவும் ஒரு வீடு உட்பட ஒரு வேன், ஒரு கார் தீயில் கருகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.04 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தீ விபத்தால் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

Kebakaran di jeti nelayan Sekinchan pagi ini mengakibatkan dua jeti dan beberapa bot musnah. Sebuah rumah, van, dan kereta turut terjejas. Tiada kemalangan jiwa dilaporkan, dan api berjaya dikawal sepenuhnya pada 10.04 pagi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *