அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய காதலர்கள் கைது!

top-news

மார்ச் 17,


ஜொகூரில் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அபாகரமாக வாகனத்தைச் செலுத்திய காதலர்கள் இருவரைக் காவல்துறையினர் துரத்தி பிடித்து கைது செய்தனர். உலூ தீராமிலிருந்து tebrau செல்லும் சாலையில் மாலை 4.17 மணிக்கு அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தென்ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் RAUB SELAMAT தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட 41 வயது ஆடவரும் 33 வயது பெண்ணும் METHAMPHETAMINE போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாகவும் வாகனத்தைச் செலுத்தியவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இருவரின் மீதும் முன்னமே போதைப்பொருள் குற்றவியல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பதாவும் தெரிய வந்துள்ளது.

Sepasang kekasih ditahan di Johor kerana memandu secara berbahaya. Kedua-duanya positif methamphetamine dan pemandu tidak memiliki lesen. Mereka juga mempunyai rekod jenayah berkaitan dadah serta disenaraikan sebagai individu dikehendaki pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *