பேருந்தை மோதிய வாகனம்! ஓட்டுநர் படுகாயம்! 18 பேர் காயம்!

top-news

மார்ச் 28,

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனமோட்டி படுகாயம் அடைந்ததாகவும் பேருந்திலிருந்த ஓட்டுநர் உட்பட 18 தொழிலாளர்கள் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை 4.47 மணிக்கு பாலிங்கில் உள்ள Kampung Lalang சாலையில் விபத்து ஏற்பட்டதாக அவசர அழைப்பைப் பெற்றதாகவும் 8 மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்த 53 வயது வாகனமோட்டியையும் பேருந்திலிருந்த 18 தொழிலாளர்கள் உட்பட பேருந்து ஓட்டுநரையும் மீட்டதாகவும் Baling மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Zukhairi Mat Tanjil தெரிவித்தார். மழையின் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர் திசையில் வந்த பேருந்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக Baling மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Zukhairi Mat Tanjil தெரிவித்தார்.

Sebuah kenderaan hilang kawalan dan merempuh bas pekerja di Kampung Lalang, Baling menyebabkan pemandu kenderaan cedera parah dan 18 penumpang termasuk pemandu bas, mengalami kecederaan ringan. Kemalangan yang berlaku pada 4:47 petang semalam dipercayai berpunca daripada keadaan jalan licin akibat hujan. Tiada kemalangan jiwa dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *