சாலையில் இருந்த குழியால் விபத்துக்குள்ளானதில் இளம் சகோதரர்கள் பலி!

- Sangeetha K Loganathan
- 21 Mar, 2025
மார்ச் 21,
சாலையில் இருந்த குழியில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 17 வயது 16 வயதுள்ள இளம் சகோதரர்கள் உயிரிழந்தனர். காலை 8.46 மணியளவில் குளுவாங்கிலிருந்து Kulai jaya செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது Norhazim Kamaruzaman 16 வயது Nur Alif Ikhwan Kamaruzaman என கண்டறியப்பட்டுள்ளது.
விபத்துக்குக் காரணம் சாலையிலிருந்த குழி என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட சாலையில் எந்தவொரு அபாயக் குறியீடும் இல்லாததால் சாலையில் ஏற்பட்டிருந்த குழி தற்செயலாக ஏற்பட்ட குழி என்றும் இது குறித்து குளுவாங் பொதுப்பணித்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் ளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
Dua beradik, Norhazim (17) dan Nur Alif Ikhwan (16) maut dalam kemalangan motosikal selepas terlanggar lubang di jalan antara Kluang dan Kulai Jaya. Tiada tanda amaran diletakkan dan Pihak Berkuasa Jalan Raya sedang menyiasat kejadian tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *