நேரெதிரே மோதிய 2 மோட்டார் சைக்கிள்கள்! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 05 Apr, 2025
ஏப்ரல் 5,
சாலையின் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞர் பலியானதாகவும் 17 வயது இளைஞர் படுகாயம் அடைந்ததாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார். அதிகாலை 2 மணிக்கு விபத்துக் குறித்தானத் தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்தில் விபத்துக்குள்ளான 2 மோட்டார் சைக்கிளோட்டிகளையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.
குவாந்தானிலிருந்து பாலோக் நோக்கி செல்லும் சாலையில் 17 வயது இளைஞர் சாலையின் எதிர்திசையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதால் எதிரில் வந்த 20 வயது மோட்டார் சைக்கிளோட்டியை மோதி விபத்தை ஏற்படுத்தியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 20 வயது இளைஞர் உயிரிழந்ததாகவும் 17 வய்து இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.
Seorang juruwang maut manakala remaja cedera parah dalam kemalangan motosikal di Jalan Kuantan-Kemaman. Mangsa, Muhammad Aidil Aqashah, 20, meninggal di tempat kejadian. Kemalangan berlaku apabila motosikal remaja 17 tahun keluar dari simpang secara tiba-tiba, menyebabkan perlanggaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *