கால்வாயில் கவிழ்ந்த கார்! தாயார் படுகாயம் பிள்ளைகள் மீட்பு!

top-news

மார்ச் 22,

கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தெமர்லோ அருகே PROTON EXORA வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளதாகக் காலை 11.22 அவசர அழைப்பைப் பெற்றதாகப் பகாங் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் ZULFADLI ZAKARIA தெரிவித்தார். 

PROTON EXORA வாகனத்திலிருந்த பெண் படுகாயம் அடைந்ததாகவும் சிறுமி உட்பட வாகனத்திலிருந்த மூவர் சிராய்ப்புக் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் பகாங் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் ZULFADLI ZAKARIA தெரிவித்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பெண் மெந்தகாப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sebuah Proton Exora hilang kawalan dan terbalik di Lebuhraya Pantai Timur berhampiran Temerloh. Seorang wanita cedera manakala tiga termasuk seorang kanak-kanak mengalami kecederaan ringan. Mangsa menerima rawatan dan polis menyiasat punca kemalangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *