மலேசியாவுக்கு வெள்ளத்தால் RM933.4 மில்லியன் இழப்பு!

- Sangeetha K Loganathan
- 19 Mar, 2025
மார்ச் 19,
மலேசியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் மொத்தம் RM933.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய புள்ளியியல் துறையான DOSM தெரிவித்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.05% என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு அதிகமானத் தொழில்துறை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் உள்நாட்டு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலை 2025 ஆம் ஆண்டு தொடராமல் இருக்க வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவமழை கால மாற்றம் ஏற்படவிருக்கும் நிலையில் தேசிய வெள்ளத் தடுப்பு ஆணையம் விரைந்து வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தவறினால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கும் என்றும் தேசிய புள்ளியியல் துறையான DOSM எச்சரிக்கை விடுத்துள்ளது.
Malaysia mengalami kerugian RM933.4 juta akibat banjir pada 2024, menyumbang 0.05% daripada KDNK negara. DOSM menekankan keperluan kerajaan memberi keutamaan kepada langkah pencegahan banjir bagi mengelakkan kesan buruk terhadap ekonomi, terutama menjelang musim monsun Ogos ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *