உணவு உற்பத்தி தொழிற்சாலை தீயில் கருகியது!

- Sangeetha K Loganathan
- 18 Mar, 2025
மார்ச் 18,
கெடாவில் உள்ள பிரபல உணவு உற்பத்தி தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சம்மந்தப்பட்ட தொழில்சாலை 70% தீயில் கருகியது. இன்று காலை 8.48 மணிக்குத் தொழில்சாலையில் தீ ஏற்பட்டுள்ளதாக அவசர அழைப்பைப் பெற்றதாகவும் 13 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கெடா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Zaki Senik தெரிவித்தார்.
1 மணிநேரத்தில் தீ பரவாமல் கட்டுப்படுத்தியதாகவும் நண்பகல் 1.48 மணிக்குத் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்தவோர் உயிரிழிப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் கெடா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Zaki Senik தெரிவித்தார்.
Sebuah kilang mi di Jalan Semeling, Bedong musnah 70 peratus dalam kebakaran pagi tadi. JBPM Kedah menerima panggilan kecemasan pada 8.48 pagi dan api dikawal pada 9.43 pagi. Tiada mangsa dilaporkan sementara punca kebakaran masih disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *