சிறந்த நிறுவனமாக KL LARUT! அரசின் 4 நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றது!

top-news
FREE WEBSITE AD

இன்று KL LARUT ஈய சுரங்கத்தில் சுற்றுச்சூழல் பொருளாதார இயற்கை வளங்கள் மேலான்மைப் பிரிவு அதிகாரிகள் சிறப்பு வருகை அளித்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோலா சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயாவில் வெற்றிகரமாக KL LARUT நிறுவனம் இயற்கைக்குப் பாதிப்பு ஏற்படாமல் சிறந்த நிர்வாகத்தின் அடிப்படையில் ஈயத்தை எடுப்பது மட்டுமின்றி, மறுசுழற்சியகங்களையும் முறையாகக் கடைப்பிடிப்பதாக பொருளாதார அமைச்சின் பொருளாதார இயற்கை வளங்கள் மேலான்மைப் பிரிவின் உதவி இயக்குநர் ZAWATI YUSRAH BINTI ZAINUDDIN தெரிவித்தார்.

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் தேசிய இயற்கை பாதுகாப்பு மேலாண்மை ஆணையத்தின் 30 க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் KL LARUT தலைமை இயக்குநர் ஓம்ஸ் பா.தியாகராஜன்.  KL LARUT இயக்குநர் டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன். KL LARUT தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் பத்மநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

சிலாங்கூர் மட்டுமின்றி மலேசிய அளவில் இயற்கைக்குப் பாதிப்பு இல்லாமல் சிறந்த நிலையில் ஈயத்தை எடுத்ததற்கு 4 நட்சத்திரங்கள் வழங்கப்பட்ட முதல் சுரங்க நிறுவனமாக KL LARUT திகழ்கிறது என சிலாங்கூர் மாநில இயற்கை பாதுகாப்பு மேலாண்மை ஆணையமும் தெரிவித்தது.

இது போல இயற்கைக்குப் பாதிப்பு ஏற்படாமல் சுரங்கங்களை நிர்வகிக்கும் முறைமையை அனைத்து சுரங்க நிர்வாகங்களும் கடைப்பிடிக்கும்படியும் அதற்கான வழிகாட்டியாகவும் KL LARUT நிறுவனத்தின் முயற்சியில் கண்காட்சியகமும் அமைக்கப்பட்டு மற்ற சுரங்க நிறுவனங்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்படுவதாக KL LARUT நிர்வாகச் செயலாளர் டாக்டர் பத்மநாதன் தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *