கோயிலை இடிக்கவில்லை! மசூதியைக் கட்ட கோயிலை இடமாற்றம் செய்யுங்கள்! – தனியார் நிறுவனம்!

top-news

மார்ச் 20,

தலைநகர் ஜாலான் MASJID இந்தியாவில் அமைந்துள்ள Dewi Sri Pathrakaliamman ஆலயத்தை இடிக்கு எண்ணம் தங்களுக்கு இல்லை என மசூதியைக் கட்டும் தனியார் நிறுவனமான Jakel Trading தெரிவித்துள்ளது. பிரபல இஸ்லாமிய ஆடை நிறுவனமான Jakel Trading நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான Aiman Darzuki சம்மந்தப்பட்ட நிலம் தொடர்பாக 2009 ஆம் ஆண்டிலிருந்தே பேச்சுவார்த்தையை நடத்தி வந்ததாகவும் 2020 ஆம் ஆண்டு கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் மசூதியைக் கட்ட அனுமதிக் கொடுத்ததாகவும் Aiman Darzuki தெரிவித்தார். 

Masjid India பகுதியில் உள்ள Dewi Sri Pathrakaliamman ஆலயத்தை இடிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் கோயிலை இடம் மாற்றுவதற்கானப் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மசூதியைக் கட்டும் நிறுவனமும் கோயில் நிர்வாகமும் சுமூகமானப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் இது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு நீதிமன்ற வழக்குகளையும் தொடரவுல்லை என Jakel Trading நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான Aiman Darzuki தெரிவித்துள்ளார்.

Jakel Trading menafikan dakwaan ingin merobohkan Kuil Dewi Sri Pathrakaliamman di Jalan Masjid India. Syarikat itu hanya mahu memindahkan kuil tersebut bagi memberi laluan kepada pembinaan masjid. Rundingan dengan pihak kuil sedang berjalan tanpa sebarang kes mahkamah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *