MASJID INDIA கோயில் தலைவர் கட்டாயப்படுத்தப்பட்டாரா? உரிமை கட்சி ஆவேசம்!

top-news

மார்ச் 27,


தலைநகரில் அமைந்துள்ள 130 ஆண்டுகள் பழமையான Dewi Sri Pathrakaliaman கோயிலை மசூதி கட்டுவதற்காக இடமாற்றம் செய்யப்படுவது வருத்தமளிக்கும் செயல் என உரிமை கட்சியின் பொதுச் செயலாளர் Satees Muniandy தெரிவித்துள்ளார். கோயில் இடமாற்றப்படாது என உறுதியாக இருந்த கோயில் நிர்வாகம் இப்போது கட்டாயத்தின் அடிப்படையில் இடமாற்றம் செய்ய ஒப்புக் கொண்டதாகவும் இது மடானி அரசாங்கத்தில் ஆட்சியிலிருக்கும் இந்தியத் தலைவர்கள் மீதான நம்பிக்கையை இழக்க செய்வதாகவும் உரிமை கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான Satees Muniandy தெரிவித்தார்.

கோயிலை அகற்ற விடவே மாட்டோம் என வீர வசனங்களைப் பொழிந்த இந்த மடானி ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் ஒரே நாளில் இடமாற்றத்திற்கு ஒப்புக் கொண்டிருப்பது அச்சரியமளிப்பதாகவும் வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கோயில் தலைவர் கோயிலை இடமாற்றம் செய்வதற்கு ஒப்புக் கொள்ளும்படியாகப் பலரிடமிருந்து அழுத்தம் வந்திருக்கும் என தாம் நம்புவதாகவும் கட்டாயத்தின் அடிப்படையில் கோயில் நிர்வாகம் இடமாற்றத்திற்கு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் Satees Muniandy தெரிவித்தார்.

Dewi Sri Pathrakaliaman, kuil berusia 130 tahun di Masjid India, dipindahkan untuk pembinaan masjid baharu. Setiausaha Agung Parti Urimai, Satees Muniandy, mendakwa kuil dipindahkan secara paksaan dan menyoal kredibiliti pemimpin India dalam kerajaan Madani.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *