நான் பிரதமராக இருக்கும் வரையில் கோயில்கள் இடிக்கப்படாது! – அன்வார்

top-news

மார்ச் 21,

தலைநகர் ஜாலான் masjid சாலையில் அமைந்துள்ள Dewi Sri Pathrakaliamman ஆலயத்தை அரசாங்கம் உடைக்கவிருப்பதாக வெளிவந்த செய்திகளைப் பிரதமர் அன்வார் மறுத்ததுடன் தாம் பிரதமராக இருக்கும் வரையில் கோயில்களும் மத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என நம்பிக்கை அளித்தார். Dewi Sri Pathrakaliamman ஆலயம் அமைந்துள்ள நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்றும் அது அரசாங்க நிலம் இல்லை என்றும் அன்வார் விளக்கமளித்தார்.

130 ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்துள்ள கோயில் எந்தவோர் ஆவணங்களுமின்றி அங்கீகரிக்காமல் அந்த ஆலயம் செயல்பட்டு வருவதால் நிலத்தின் உரிமையாளர் நிலத்தை மீட்டு அவர் மசூதியை எழுப்ப திட்டமிட்டுள்ளார் என்றும் இதனை மதங்களுக்கிடையிலானச் சிக்கலாகவோ, முக்கியமாக இஸ்லாமைச் சார்ந்தவர்கள் கோயில் தொடர்பானப் புரிதல் இல்லாமல் வார்த்தைகளை விட வேண்டாம் என்றும் பிரதமர் அன்வார் கேட்டுக்கொண்டார். 

இந்த விவகாரத்தில் நிலத்தின் உரிமையாளருக்கும் கோயில் நிரவாகத்தினருமிடையில் பேச்சு வார்த்தைகளை முறையாக நடத்தப்பட வேண்டும் என கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்திற்குத் தாம் வலியுறுத்தியதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

Perdana Menteri Anwar Ibrahim menegaskan bahawa tiada kuil akan dirobohkan selagi beliau memegang jawatan. Isu Kuil Dewi Sri Pathrakaliamman perlu diselesaikan melalui perbincangan antara pemilik tanah dan pengurusan kuil tanpa menimbulkan ketegangan antara agama.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *