அல் நஸர் - அல் தவுன் அணிகள் மோதிய போட்டியில் ரசிகர்களை ஏமாற்றிய ரெனால்டோ!
- Muthu Kumar
- 02 Nov, 2024
சவுதி அரேபியாவின் உள்ளூர் நாக்அவுட் கால்பந்து தொடராக கிங்ஸ் கோப்பை தொடர் இருந்து வருகிறது. இதில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டியில் ரெனால்டோவின் அல் நஸர் - அல் தவுன் அணிகள் மோதின. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 0-1 என்ற கணக்கில் அல்-தவுன் அணி வெற்றி பெற்றது. அத்துடன் அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றது.
போட்டி முடிவதற்கு சில நிமிடங்களே இருக்க முக்கியமான கட்டத்தில் அல்-நஸர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஒரு கோல் அடித்து எப்படியாவது போட்டியை அல்- நஸர் ட்ரா செய்துவிடும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் அதை வீணடித்தார் ஸ்டார் வீரரான ரெனால்டோ
முழு நேரம் ஆட்டம் முடிந்து கூடுதல் நேரத்தில் போட்டியை முடிக்கும் விசில் அடிக்க சில விநாடிகளே இருந்தபோது இந்த முத்தான வாய்ப்பு கிடைத்தது. இதனை கோலாக்கும் முயற்சியில் ரெனால்டோ களமிறங்கினார். அவர் ஓங்கி அடிக்க கோல் போஸ்டை மேலே சென்ற பந்து, போஸ்ட் பின் பகுதியில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி பறந்தது. இதனால் ரெனால்டோவின் கோல் முயற்சி தவிடுபொடியான நிலையில், கள நடுவர் விசில் அடிக்க அல்-நஸர் கடைசி வாய்ப்பும் வீணாய் போனது.
ரெனால்டோவின் பந்து, அவரது விளையாட்டை படம்பிடித்து வந்த சிறுவன் மற்றும் அவரது கைகளில் வைத்திருந்த போன் மீது பட்டு உடைந்தது. இதில் போனை சிறுவன் தவறவிட்ட நிலையில், சுக்கு நூறாக உடைந்து. இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. அல்-நஸர் அணியில் விளையாடிய ரொனால்டோ இதுவரை ஒரு கோப்பை கூட வெல்லவில்லை என்றாலும் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்
பெனால்டியை தவறவிட்டதற்காக ரொனால்டோ கடுமையாக விமர்சிக்கப்பட்டார். போட்டிக்குப் பிறகு அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "ஒவ்வொரு சவாலும் வளர ஒரு வாய்ப்பு," என்றும், வலுவாக மீண்டு வருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.செப்டம்பர் மாதம் லூயிஸ் காஸ்ட்ரோவுக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளராக இத்தாலிய வீரர் ஸ்டெபானோ பியோலிக்கு ஏற்பட்ட முதல் தோல்வி இதுவாகும்.
இந்த சீசனில் ரொனால்டோ மற்றும் அல்-நஸருக்கு இன்னும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன, ஆனால் சவுதி புரோ லீக்கின் எட்டு ஆட்டங்களுக்குப் பிறகு ஏற்கனவே தலைவர் அல்-ஹிலாலை விட ஆறு புள்ளிகள் பின்தங்கி உள்ளனர் மற்றும் ஆசிய சாம்பியன்ஸ் லீக்கின் குழு கட்டத்தில் மூன்று ஆட்டங்களில் ஏழு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
"தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம், ஆனால் எங்களால் ஆட்டத்தை வெல்ல முடியவில்லை" என்று பியோலி கூறினார். அத்துடன் கோப்பையை வெல்லாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாகவும், விரைவில் மீண்டு வருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *