பினாங்கு மாநகராட்சியின் அமலாக்கத் துறையினருக்கு மின்சக்தி மோட்டார் சைக்கிள்கள்!

- Muthu Kumar
- 22 Mar, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, மார்ச் 22-
பினாங்கு மாநகர் மன்றத்தில் ஒரு பிரிவாக செயல்படும் கட்டாய அமலாக்கத் துறை ஊழியர்களின் பணி நடவடிக்கைகள் பயனுக்காக, வினைத்திறன்மிக்க மின்சக்தி மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டிருக்கும் விவகாரத்தில், மாநில அரசின் பரிபூரண ஒத்துழைப்பு அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் 12வது திட்டத்தின் அடிப்படையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பினை தக்க வைத்து, பசுமையைப் பேணும் கோட்பாட்டுக்கு ஏதுவாகவும் அதே வேளையில், கரிம அபாயத்திற்கு வழி வகுக்கும் எரிசக்தி பயன்பாட்டை குறைப்பதற்கு பெரிதும் உதவும் மின்சக்தி வாகனங்களின் ஊக்குவிப்புக்கும், துணை நிற்கும் இத்திட்டம் வரவேற்கத் தக்கது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தியால் இயங்கும் திறன்மிக்க அம்சத்தோடு மட்டுமின்றி பின்னோக்கி நகரும் வசதியுடனும் இதரப் பல நவீனமய செயல்பாட்டு திறன்களை உள்ளடக்கிய இந்த மின்சக்தி மோட்டார் சைக்கிள்கள் அமலாக்கப் பிரிவின் 30 ஊழியர்களுக்கு முதற்கட்டமாக ஒப்படைக்கப்பட்டு, காலப்போக்கில் மேலும் பல ஊழியர்களுக்கும் இவ்வகை வாகனங்களை வழங்குவதற்கு மன்றம் உத்தேசம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வகை மின்சக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு மாநகர் மன்றம் சார்பில் இங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் மின்சக்தி நிரப்புக் கூடங்களில் அவற்றுக்கான மின்சக்தி தேவையை ஈடேற்றிக் கொள்ளலாமென்றும், தவிரவும் அமலாக்கத் துறையின் பணிமனைகளில் இதற்கான மின்சக்தி ஏற்றக் கூடங்களும் அமைக்கப்பட்டிருப்பதால் எவ்வித அசம்பாவிதங்களின்றி ஊழியர்கள் நிம்மதியான முறையில் கடமையாற்ற முடியுமென்றும் கூறப்பட்டுள்ளது.
அவ்வண்ணம் நேற்று காலையில் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கான இவ்வகை மோட்டார் சைக்கிள்களின் அறிமுக நிகழ்ச்சிக்கு நேரிடையாக வருகையளித்திருந்த மாநில ஆட்சிக் குழுவில், நகரப்பெருந்திட்டம் மற்றும் உள்ளாட்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹிங் மூய் லாய் இது குறித்து செய்தியாளர்கள் குழுவினருடன் நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் விவரித்தார்.
பிரத்தியேகமான முறையில் வடிவமைக்கப்பட்டு பற்பல நூதனமான இயக்க விசை நுட்பங்களின் செயல்பாடுகள் பொருந்திய இந்த மோட்டார் சைக்கிள்களின் முன்புறம் காணப்படும் ஒளிபடக் கருவிகள். அதிகாரிகள் குறி வைக்கும் எவ்வித உருவங்களையும் பதித்து விடக்கூடிய சாமர்த்தியதைக் கொண்டிருப்பதும் கூடுதல் சிறப்பு என்பதால், இவை ஊழியர்களின் பணிக்கு எளிதாகவும் இலகுவாகவும் துணை நிற்பது திண்ணமென்று அவருடன் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாநகர் மன்றத் தலைவர் அ.ராஜேந்திரன் புலப்படுத்தினார்.
Kerajaan negeri Pulau Pinang menyokong penggunaan motosikal elektrik bagi pegawai penguat kuasa majlis bandaraya untuk meningkatkan kecekapan dan menjaga alam sekitar. Sebanyak 30 motosikal diserahkan sebagai fasa pertama, dengan rancangan pengembangan serta kemudahan pengecasan elektrik yang mencukupi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *