காணாமல் போனவர் 2 நாள்களுக்குப் பின் ஆற்றில் சடலமாக மீட்பு!

top-news

மார்ச் 21,

காணாமல் போனதாக நம்பப்பட்ட 43 வயது ஆடவர் ஒருவர் 2 நாள்கள் தேடலுக்குப் பின் Kampung Ara Lasah ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். கடந்த செவ்வாய் கிழமை 43 வயது Amran Ahin எனும் ஆடவர் வீட்டிலிருந்து வெளியேறி வீடு திரும்பாத நிலையில் அவரின் குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாகப் புகார் அளித்ததும் அவரைத் தேடும்பணியைத் தொடங்கியதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். 

அவர் வீட்டிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று நண்பகல் 12.52 மணிக்கு அவரின் உடல் சுங்கை சிப்பூட்டில் உள்ள Kampung Ara Lasah ஆற்றில் மிதந்ததாகவும் பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

Lelaki berusia 43 tahun yang dilaporkan hilang ditemui mati di Sungai Siput, Kampung Ara Lasah selepas dua hari pencarian. Timbalan Pengarah Jabatan Bomba dan Penyelam berkata mayatnya dijumpai terapung dan dihantar ke hospital untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *