தீ விபத்தில் கருகிய வீடு! ஆடவர் பலி!

- Sangeetha K Loganathan
- 24 Mar, 2025
மார்ச் 24,
இன்று அதிகாலை பலகை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 வயது ஆடவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.20 மணிக்கு லாபுவான் தீயணைப்பு ஆணையத்திற்கு அவசர அழைப்புக் கிடைத்ததாகவும் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு அதிகாரிகள் செல்லும் முன் வீடு முற்றிலும் தீயில் கருகியதாக லாபுவான் மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Abdul Rahman Ali தெரிவித்தார்.
21 பணியாளர்கள் லாபுவானில் உள்ள Kampung Lubok Temiang, Simpang Mat Isa பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு விரைந்ததாகவும் வீட்டின் முன் மயக்கநிலையில் 53 வயது ஆடவர் கிடந்ததாகவும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகவும் லாபுவான் மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Abdul Rahman Ali தெரிவித்தார்.
Seorang lelaki berusia 53 tahun maut dalam kebakaran rumah kayu di Kampung Lubok Temiang, Labuan awal pagi ini. Rumah musnah sepenuhnya sebelum bomba tiba. Mangsa ditemui tidak sedarkan diri di hadapan rumah dan meninggal dunia dalam perjalanan ke hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *