17 வயது இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த ரோஹிங்கியா ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 21 Mar, 2025
மார்ச் 21,
சமூகவலைத்தலத்தில் போலி புகைப்படங்களைப் பயன்படுத்தி இளம்பெண்களைக் கவரும் நடவடிக்கையில் ஈடுபட்ட 29 வயது ரோஹிங்கியா நாட்டு இளைஞர் 17 வயது இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இன்று மூவார் Sesyen நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த ஜனவரி 29, நள்ளிரவில் சம்மந்தப்பட்ட இளம் பெண்ணைப் பத்து பாஹாட்டில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் சந்திக்கும் போது பாலியல் பலாத்காரம் செய்ததாக மூவார் Sesyen நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
குற்றத்தை ஒப்புக் கொண்டதால் ஜாமீன் கோரிய 29 வயது ரோஹிங்கியா நாட்டு இளைஞரின் மனுவை நீதிபதி ரத்து செய்ததுடன் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார். போலியானப் புகைப்படத்தைப் பயன்படுத்தி இளம்பெண்களைச் சந்தித்து நட்புடன் பழகுவதாகக் கூறி அவர்களை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் நண்பரைச் சந்திப்பதாக நினைத்து மட்டுமே 29 வயது ரோஹிங்கியா நாட்டு இளைஞரைச் சந்திக்க விரும்பியதாகப் பாதிக்கப்பட்ட 17 வயது இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Seorang lelaki Rohingya berusia 29 tahun ditahan kerana merogol remaja perempuan 17 tahun selepas memperdayanya melalui media sosial. Suspek mengaku bersalah di Mahkamah Sesyen Muar dan tidak dibenarkan jaminan sementara siasatan lanjut dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *