போலிசாரைத் தாக்கிய ஆடவர் கைது! பழைய காணொலி வைரல்!

- Sangeetha K Loganathan
- 24 Mar, 2025
மார்ச் 24,
ஆடவர் ஒருவர் போலிசாரைகடத் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைதலத்தில் பரவியது தொடர்பாகக் கவல்துறை விளக்கமளித்துள்ளது. சம்மந்தப்பட்ட காணொலி கடந்த ஜனவரி 1 எடுக்கப்பட்டது என்றும் காவல் அதிகாரிகளைத் தாக்கிய ஆடவர் நீதிமன்ற விசாரணையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் TIMUR LAUT மாவட்டக் காவல் ஆணையர் ABDUL RAZAK MUHAMMAD தெரிவித்தார்.
பினாங்கில் உள்ள LEBUH LIGHT சாலையில் கைகலப்பில் ஈடுபட்டதற்காக 42 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்யும் போது அவர் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகவும் போலிசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்ததால் காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட ஆடவரைக் கட்டுப்படுத்தியதாகவும் TIMUR LAUT மாவட்டக் காவல் ஆணையர் ABDUL RAZAK MUHAMMAD தெரிவித்தார். கடந்த 3 ஜனவரி கைது செய்யப்பட்ட ஆடவருக்கு GEORGETOWN MAJISTRET நீதிமன்றம் அதிகாரிகளைத் தாக்கியதற்காக RM 2,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
Polis menjelaskan video tular mengenai lelaki menyerang anggota mereka sebenarnya dirakam pada 1 Januari. Suspek, 42, ditahan di Lebuh Light, Pulau Pinang selepas cuba melawan polis. Mahkamah Majistret Georgetown telah mengenakan denda RM2,000 terhadapnya pada 3 Januari.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *