சட்டவிரோத மோட்டார் பந்தயம்! 12 வயது சிறுமி உட்பட 38 பேர் கைது!

- Shan Siva
- 21 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 21: நேற்றிரவு கோலாலம்பூரில் ஜாலான் அம்பாங் மற்றும் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களுக்கு எதிராக சாலைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்ட (ஜேபிஜே) அமலாக்க நடவடிக்கையின் போது 38 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் இரண்டு பேர்12 வயது சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து சிறார்களை காவலில் எடுத்து, அவர்களின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக ஜேபிஜே தலைமை இயக்குநர் Aedy Fadly Ramli தெரிவித்தார்.
மேலும், தங்கள் குழந்தைகளை சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்ததற்காக அவர்களின் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இது ஆழ்ந்த கவலைக்குரியது. அவர்கள் வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமல்ல, அவர்கள் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான முறையில் சவாரி செய்தனர் என்று ஏடி நேற்று கோலாலம்பூர் ஜேபிஜே நடத்திய நிகழ்வில் மேற்கோள் காட்டினார்.
இந்த நடவடிக்கையின் போது, போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஜேபிஜே 196 சம்மன்களை வழங்கியதாகவும், சட்டவிரோத கட்டமைப்பு, இயந்திரம் மற்றும் எக்ஸாஸ்ட் மாற்றங்களுக்காக 19 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ததாகவும் ஏடி கூறினார்!
JPJ menahan 38 penunggang motosikal dalam operasi lumba haram di Kuala Lumpur, termasuk dua kanak-kanak 12 tahun. Ibu bapa mereka akan dikenakan tindakan. Sebanyak 196 saman dikeluarkan, dan 19 motosikal diubah suai secara haram turut dirampas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *