வீட்டுக்குள் புகுந்த கட்டுப்பாட்டை இழந்த லாரி! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 22 Mar, 2025
மார்ச் 22,
கட்டுப்பாட்டை இழந்த குடிநீர் லாரி சாலையோர வீட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் படுகாயம் அடைந்தனர். பகாங் ரவூப்பில் உள்ள தாமான் கெனாஙா குடியிருப்புப் பகுதியில் உள்ள இரு வீடுகள் மிகுந்த சேதத்திற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக நண்பகல் 12.41 அவசர அழைப்புப் பெற்றதாகவும் ரவூப் மீட்பு ஆணையத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பகாங் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் ZULFADLI ZAKARIA தெரிவித்தார். விபத்தில் இரு வீடுகள் மிகுந்த சேதத்துக்குள்ளானதாகவும் வீட்டிலிருந்தவர்களுக்கு எந்தவோர் பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக் குறித்தான விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebuah lori air hilang kawalan dan merempuh dua rumah di Taman Kenanga, Raub menyebabkan pemandu dan pembantunya cedera. Tiada penghuni rumah tercedera. Pihak berkuasa sedang menyiasat punca kejadian yang menyebabkan kerosakan teruk pada rumah tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *