மலேசியாவில் இனவெறியர்கள் அதிகம்! – மகாதீர் வருத்தம்!

- Sangeetha K Loganathan
- 27 Mar, 2025
மார்ச் 27,
தற்போது மலேசியாவில் இனக்காவலர்களுக்கும் இனவெறியர்களுக்குமான வேறுபாடுகள் இல்லாமல் போய்விட்டது என முன்னாள் பிரதமர் DR MAHATHIR BIN MOHAMAD வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தன்னுடைய சொந்த இனத்திற்காக மட்டும் பாடுபடுவது இனமான உணர்வு இல்லை. அது இனவெறி என மகாதீர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே இனம் ஒடுக்கப்படும் போது அவர்களுக்காகப் போராடுவதும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் தான் இனக்காவலர்கள் என மகாதீர் தெரிவித்தார்.
பெரும்பான்மை சிறுபான்மை என இரு வெவ்வேறு சமூகமும் இப்போது இனவெறியர்களால் வழிநடத்தப்படுவதாகவும் இது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்றும் பிரிவினைகள் மட்டுமே மிஞ்சும் என்றும் மகாதீர் குறிப்பிட்டார். ஒரு தேசத்தையோ இனத்தையோ ஒடுக்கும் செயலுக்கு எதிராகப் அந்த இனத்தையோ தேசத்தையோ பாதுகாக்கும் முயற்சிக்குப் பெயர் இனமான உணர்வு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என Podcast Dr M எனும் நேர்காணலில் முன்னாள் பிரதமர் DR MAHATHIR BIN MOHAMAD வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Tun Dr. Mahathir Mohamad meluahkan kebimbangan mengenai peningkatan sikap perkauman di Malaysia. Beliau menegaskan perbezaan antara nasionalisme dan ekstremisme perkauman serta menekankan bahawa perjuangan mempertahankan hak bukan tindakan rasis tetapi sebahagian daripada semangat kebangsaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *