மலேசிய ஊடக மன்ற மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது! – YB Teo Nie Ching

- Sangeetha K Loganathan
- 20 Mar, 2025
மார்ச் 20,
மலேசிய ஊடகத்தினரின் சுதந்திரத்தையும் அவர்களுக்கான நெறிமுறைகளையும் கொண்ட 2024 ஆம் ஆண்டுக்கான மலேசிய ஊடக மன்ற (Malaysian Media Council Bill 2024) மசோதா மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தொடர்புதுறை துணை அமைச்சர் YB Teo Nie Ching தெரிவித்தார்.
எம்.எம்.எம் அமைப்பதற்கான இரண்டாவது வாசிப்பை தாக்கல் செய்த தொடர்பு துணையமைச்சர் YB Teo Nie Ching-க்கு ஆதரவாக 17 செனட்டர்களின் விவாதத்திற்கு பிறகு அதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் தலையீடில்லாமல் சொந்த விதிகளை அமைக்க மலேசிய ஊடக மன்றம் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் நெறிமுறையை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று YB Teo Nie Ching வலியுறுத்தினார்.
"நாங்கள் ஊடக மன்றத்திற்கு அதிகாரம் அளிக்க விரும்புகிறோம். எனவே, இம்மன்றம் சுயமாக இயங்கும் என எதிர்பார்க்கிறேன். இதில் ஏற்படும் அதிருப்தியைக் கையாள, மன்றத்தின் நடத்தை நெறிமுறையை வரையறுப்பதற்கான அதிகாரம் வழங்கப்படுவது அவசியம்.“ என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான YB Teo Nie Ching தெரிவித்தார்..
அரசாங்கப் பிரதிநிதிகள் மன்றக் குழுவில் இருக்க வேண்டும் என்றும் இந்த மசோதாவில் விளக்கப்பட்டுள்ளபடி, அரசாங்கப் பிரதிநிதியாக இருப்பவர் மலேசிய ஒளிபரப்புத் துறையைச் சார்ந்தவர்களாகவும் பெர்னாமாவில் பணியாற்றுவராகவும் இருக்க வேண்டும்" என YB Teo Nie Ching குறிப்பிட்டார்.
Dewan Negara meluluskan Rang Undang-Undang Majlis Media Malaysia 2024 dengan majoriti sokongan selepas perbahasan oleh 17 senator. Timbalan Menteri Komunikasi, YB Teo Nie Ching menegaskan majlis ini akan beroperasi secara bebas tanpa campur tangan kerajaan dan menetapkan kod etika sendiri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *